Published : 01 May 2016 12:54 PM
Last Updated : 01 May 2016 12:54 PM

2015-16ம் நிதியாண்டில் 4% இந்தியர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

4 சதவீத இந்தியர்கள் மட்டுமே 2015-16ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று வருமான வரித்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுபவர்கள் இந்தியாவில் 10 லட்சம் நபர்களே உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

2012-13ம் ஆண்டின்படி 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுவதாக 20,000 நபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்கள் என்றும் 5.5 லட்ச ரூபாயிலிருந்து 9.5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுவதாக 20 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளார்கள் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மொத்தம் இந்த ஆண்டில் 3.1 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் வருமான வரித்துறை, 2000-2001 முதல் 2014-15 நிதியாண்டு வரை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தால் வசூலிக்கப்பட்ட நேரடி வரிகள், நேரடி வரிக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதம் போன்றவற்றை வெளியிட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, வருமான வரித்துறை இந்த தகவலை வெளிட்டது `மைல்கல்’ முடிவு என்று பாராட்டு தெரிவித்தார். மேலும் கொள்கை வகுப்பதில் வெளிப்படைத்தன்மைக்கும் தகவலை தெரிவிப்பதற்கும் இது ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த தகவல்கள் ஆய்வாளர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். வரி தொடர்பாக கொள்கை வகுக்கும் போது இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நேரடி வரிக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதம் 2007-08ம் ஆண்டு 6.3 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 2015-16ம் ஆண்டில் 5.47 சதவீத மாக இருக்கிறது. மொத்த நேரடி வரி 2000-01ம் ஆண்டு 36.31 சதவீதத் திலிருந்து 2015-16ம் ஆண்டில் 51 சதவீதமாக உயர்ந்துள்ளது.

80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல்

கடந்த நான்கு வருடங்களில் (2011-12 முதல் 2014-2015 வரை) 80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்துள்ளார்கள் என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

2011-12 நிதியாண்டில் 4.36 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்கள். இது 2014-15 நிதியாண்டில் 5.16 கோடி நபர்களாக உயர்ந்திருக்கிறது. தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வது உயர்ந்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x