

புதுடெல்லி: மனிதாபிமான அடிப்படையில் உணவு தட்டுப்பாட்டில் அவதிப்படும் நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இதுவரை 18 லட்சம் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய உணவுத்துறை செயலர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். மே 13-ம் தேதி வரை 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் பெர்லினில் போடப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் இந்தியாவின் பங்கு 20 லட்சம் டன்னாகும். இது சர்வதேச வர்த்தகத்தில் ஒரு சதவீதமாகும்.
ஆப்கனிஸ்தான், வங்கதேசம், பூடான், இஸ்ரேல், இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், தென்கொரியா, இலங்கை, ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், ஏமன் ஆகிய நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.