ஆண்களுக்கான ஜீன்ஸ் ஆடைகளை அறிமுகப்படுத்தியது அமேசான்.இன் இணையதளம்

ஆண்களுக்கான ஜீன்ஸ் ஆடைகளை அறிமுகப்படுத்தியது அமேசான்.இன் இணையதளம்
Updated on
1 min read

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் ஒன்றான அமேசான்.இன் நிறுவனம் ஆண்களுக்கான ஜீன்ஸ் ஆடை விற்பனையில் கால் பதித்துள்ளது.

டெனிம் வகை ஆடைகள் தி டெனிம் ஹாங்அவுட் என்ற பெயரில் 1,500-க்கும் மேற்பட்ட ரகங்களிலும், ஆண்களின் உள்ளாடைகளில் 1,300-க்கும் மேற்பட்ட புதிய ரகங்களிலும் அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது. டெனிம் வகைகளில் நீல நிற ஜீன் மட்டுமின்றி பல்வேறு நிறங்களில் ஆடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ராக் ஸ்டார் சிக்கு முதல் கார்ப்பரேட் வகை லெவிஸ், பெப்பே ஜீன்ஸ், லீ, ராங்லர், ஜாக் அண்ட் ஜோன்ஸ், லீ கூப்பர், நியூபோர்ட் உள்ளிட்ட பல்வேறு பிரபல பிராண்டுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

வாசகங்கள் பதித்த பனியன்கள், ரிஸ்ட் பேண்ட்கள், பெல்ட், பைகள், ஷூக்கள், பர்ஸ்கள், தொப்பிள் என ஏராளமான துணைப் பொருள்களும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன என்று அமேசான் இந்தியாவின் ஃபேஷன் பிரிவுத் தலைவர் விகாஸ் புரோகித் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in