

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டாளர் களுக்கும் ஒரே விதமான வரி விதிப்பு முறை இருக்க வேண்டும் என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்தார்.
கடன்பத்திர சந்தையில் தற்போது காணப்படும் வரி முரண் பாடுகளை களைய விரிவான கொள்கையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது பலவித வரி விதிப்பு முறைகள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு கட்டமைப்பு நிதி கடன் பத்திரங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும்போது நிறுத்தி வைக்கப் படும் வரி (withholding tax) அளவு பிறவற்றுடன் ஒப்பிடும்போது முரண்பட்டதாக இருக்கிறது.
அதனால் இந்த வேறுபாடு களை சரிசெய்யும் பட்சத்தில் நீண்ட கால நோக்கத்தில் அதிக முதலீடு வரும் வாய்ப்பு இருக் கிறது. குறிப்பாக. தற்போதைய நிலையில் இருக்கும் வரி வேறு பாடுகள் காரணமாக கட்டுமானத் துறை போன்றவற்றில் முதலீட் டாளர்கள் முதலீடு செய்ய தயங்கு கிறார்கள். அதனால்தான் அரசி டம் இதை கேட்கிறோம் என்று செபி தலைவர் யூ.கே.சின்ஹா செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.