ஸ்ப்ளெண்டர் டூ ஆக்டிவா | இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள்

ஸ்ப்ளெண்டர் டூ ஆக்டிவா | இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். இதில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மக்களுக்கு இன்றியமையாத அன்றாட தேவையாக அமைந்துள்ளது. வேலைக்கு செல்ல, குழந்தைகளை அழைத்து செல்ல, கடைக்கு செல்ல என அதன் தேவை நீண்டு கொண்டே உள்ளது. சிலருக்கு இருசக்கர வாகனத்தின் மூலம் தான் வாழ்வாதாரமே ஈட்டி வருகின்றனர்.

இப்படி ஒருபக்கம் இருசக்கர வாகனத்தின் பயன்பாடு பாசிட்டிவாக அமைந்துள்ளது. இருந்தாலும் இந்தியாவில் பறக்கும் பெரும்பாலன இருசக்கர வாகனங்களுக்கு இயக்க சக்தியாக அமைந்துள்ள எரிபொருளான பெட்ரோலின் விலை அன்றாடம் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள் குறித்து பார்ப்போம். இதில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

  • ஹீரோ ஸ்ப்ளெண்டர் - 2,62,249 யூனிட்கள்
  • ஹோண்டா ஆக்டிவா - 1,49,407 யூனிட்கள்
  • ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் - 1,27,330 யூனிட்கள்
  • ஹோண்டா சிபி ஷைன் - 1,19,765 யூனிட்கள்
  • பஜாஜ் பல்ஸர் - 69,241 யூனிட்கள்
  • டிவிஎஸ் ஜூப்பிட்டர் - 59,613 யூனிட்கள்
  • சுஸுகி அக்செஸ் - 35,709 யூனிட்கள்
  • டிவிஎஸ் எக்ஸ்.எல் 100 - 35,148 யூனிட்கள்
  • ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - 29,959 யூனிட்கள்
  • ஹீரோ கிளாமர் - 28,363 யூனிட்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in