Published : 24 May 2016 10:38 AM
Last Updated : 24 May 2016 10:38 AM

தொழில் முன்னோடிகள்: தடைகள் நமக்கில்லை!

சாதிக்க வேண்டுமென்று நீங்கள் நிஜமாகவே ஆசைப்பட்டால், அதற் கான வழியைக் கண்டுபிடிப்பீர்கள். ஜெயிக்கும் வெறி இல்லையென்றால், சாக்குப் போக்குகள் சொல்வீர்கள். - ஜிம் ரோன், அமெரிக்கத் தொழிலதிபர் (1930 2009)

நாம் இரண்டு விதமாக வாழ்க்கையை நடத்தலாம். தேடிச் சோறு நிதந்தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் வேடிக்கை மனிதர் வாழ்க்கை ஒருவகை. ஆயுட்காலம் முழுவதும், அதற்குப் பிறகும், பிறருக்கு உதவும் மகத்தான வாழ்க்கை அடுத்த வகை.

வாரிசுகளை உருவாக்குவதைத் தாண்டி, நம் வாழ்க்கையை அர்த்த முள்ளதாக்க என்ன செய்யலாம்? மரம் வளர்க்கலாம், புத்தகம் எழுதலாம் அல்லது பிசினஸ் தொடங்கலாம்.

மரம் பூக்கும், காய்க்கும், கிளைகள் விரிக்கும், நிழல் பரப்பும். கிளைகளில் கிளிகள், குயில்கள், காகங்கள் கூடுகள் கட்டும். குடும்பம் நடத்தும். நிழலும், பறவைக் குரல்களும் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் ஆசுவாசம் தரும். பார்க்கும்போது, மரம் வளர்த்தவன் மனதில் வருவது பரவசம்.

புத்தகம் அறிவையும், அனுப வத்தையும் பகிர்ந்துகொள்ளும் அரங் கம். படிப்பவரில் ஒருவரின் மனநி லையையாவது, ஒரு அங்குலமாவது உயர்த்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி. வேறென்ன வேண்டும் ஒரு படைப்பாளிக்கு? அப்படிப்பட்ட மனநிறைவு பிசினஸ்மேனுக்கு எதில் கிடைக்கிறது, எப்படிக் கிடைக்கிறது?

சுமார் 35,000 ஊழியர்கள், 11 கோடி வாடிக்கையாளர்கள், 40 லட்சம் பங்கு தாரர்கள், 5 லட்சம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் என உச்சம் தொடும் கம்பெனிகள். 10,000 ஏழை மாணவர்க ளுக்குக் கல்வி நிதி உதவி, ஒன்றரை லட்சம் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி, 3,50,000 பேருக்குச் சுகாதார, ஆரோக்கிய வசதிகள், 40,000 குடும்பங்களுக்கு நவீன விவசாயப் பயிற்சி எனப் பல்வகை சமுதாயநலப் பணிகள்.

முகேஷ், அனில் அம்பானி சகோ தரர்கள் நிர்வகிக்கும் ரிலையன்சின் பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியம். திருபாய் அம்பானி என்னும் செல்லப் பெயரால் பிரபலமாகியிருக்கும் தீரஜ்லால் ஹீ ராச்சந்த் அம்பானியின் உருவாக்கம்.

****

31 நாடுகளில் 85 அலுவலகங்கள், 100 சாஃப்ட்வேர் மேம்பாட்டு மையங் கள், 2 லட்சம் ஊழியர்கள், 59,000 கோடி ஆண்டு வருமானம். 6 லட்சம் பங்குதாரர்கள். நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோரைக் கோடீஸ்வரர்களாக் கிய பெருமை. கிராமப் பள்ளிகளில் கழிவறைகள், நூலகங்கள், புற்றுநோய், தொழுநோய் வியாதிக்காரர்களுக்கு இலவச சிகிச்சை, அநாதைகள் ஆதரவு, தொழில் முனைவோருக்கு வென்ச்சர் கேபிடல் எனப் பல்வேறு சமுதாய உதவிகள். நாராயணமூர்த்தி தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் பல முகங்கள்.

உலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வ ரர். கல்வி, ஆரோக்கியம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு 100 நாடுகளில், பல லட்சம் விளிம்புநிலை மனிதர்களைக் கை தூக்கிவிடும் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill and Melinda Gates Foundation) என்னும் சமூக சேவை அமைப்பு நிறுவனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தந்தை பில் கேட்ஸ்.

ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், விநியோகஸ்தர் கள், உபதொழில் நடத்துபவர்கள், வாழ்க்கைப் போராட்டத்தில் தத்தளிப் போர், தொழில் முனைவோர் எனக் கோடிக் கோடிக் குடும்பங்களில் திருபாய் அம்பானி, நாராயணமூர்த்தி, பில் கேட்ஸ் விளக்கேற்றி வைத்திருக் கிறார்கள். இந்த விளக்கு, வரப்போ கும் எத்தனை எத்தனையோ தலைமு றைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் தரப்போகிறது.

நாகரீகம் தொடங்கிய நாட்களி லிருந் தே, தொழில் முயற்சிகளும் இருக்கி றது. ஆனால், ஆட்சியாளர்கள், அதி காரிகள், போர்வீரர்கள் ஆகி யோருக்கு இருந்த சமுதாய அந்தஸ்து வியாபாரி களுக்கு இருக்கவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாகத்தான், பிசினஸ்மேன்கள் மதிக்கப்படுகிறார் கள், புகழ் வெளிச்சத் தில் ஜொலிக் கிறார்கள். சாமானியனுக் குக்கூட அம்பானிகளைத் தெரிகிறது. ``திருபாய் அம்பானிபோல், நாராய ண மூர்த்தி போல், பில் கேட்ஸ் போல் தொழிலதி பராக வேண்டும்” என்று பிசினஸ்மேன் களை முன்னோடிகளாக, வழிகாட்டி களாக மக்கள், குறிப்பாக, இளைய தலைமுறை ஏற்றுக்கொண்டிருக்கி றார்கள்.

பிசினஸ்மேன்களின் பணவசதிகள், ஆடம்பர வாழ்க்கை, அவர்கள் மீது விழும் விளம்பர வெளிச்சம் ஆகியவை மக்களை ஈர்க்கின்றன. பல கோடி இளைஞர்கள், இளைஞிகள் பிசினஸ் தொடங்கத் துடிக்கிறார்கள். ஆனால், லட்சத்தில் ஒருவரே பிசினஸ் தொடங்குகிறார்கள். நீங்களும், இந்தப் பெரும்பான்மையில் ஒருவராக, ஆசை இருந்தும் தயங்கிப் பின்நிற்பவராக இருக்கலாம்.

பிசினஸ் ஏன் தொடங்கவில்லை என்பதற்கு நீங்கள் என்ன காரணங்கள் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். பட்டியல் போடட்டுமா?

1. பணம் இல்லை

2. படிப்பு இல்லை

3. பிசினஸ் தொடங் கும் வயது இல்லை

4. ஆரோக்கியம் இல்லை

5. குடும்பப் பின் புலம் இல்லை

6. பிசினஸ் ஆண்கள் உலகம். நான் ஒரு பெண்.

என் அனுபவத்தில் சொல்கிறேன். தொழிலதிபராகக் கனவுகள் கண்டு, அந்தப் பாதையில் ஒரு அடிகூட எடுத் துவைக்காத பல்லாயிரம் பேரை நான் அறிவேன். மேலே பார்த்த பட்டியல், காரணங்கள் இல்லை, பயங்கள். நினைத்ததை முடிக்காமல் போனதற்கு நாம் சொல்லும் சாக்குப் போக்குகள், தன்னம்பிக்கை இல்லாமையை மறைக்க நாம் அணியும் முகமூடிகள்.

நம்ப முடியவில்லையா? இதோ, ஒவ்வொரு பயத்தையும் தூள் தூளாக் கும் மறுக்கவே முடியாத ஆதாரங்கள்:

*

``வாட்ஸ்-ஆப்’’ தொடங்கிய ஜான் கோம் ஒரு ரஷ்யக் கட்டிடத் தொழிலா ளியின் மகன். சாப்பாட்டுக்கே திண்டாட் டம். 16 வயதில் அம்மாவோடு அமெ ரிக்கா வந்தார். பலசரக்குக் கடையில் குப்பை கூட்டுபவராக வாழ்க்கையைத் தொடங்கினார். சம்பளம் போதவில்லை. ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை தேடினார். “தகுதி இல்லை” என்று நிராகரிக்கப்பட்டார். பல வருடங்கள் அரசாங்கம் தரும் இலவசச் சாப்பாட்டை வரிசையில் நின்று வாங்கி வயிறு நிறைத்தார். 2009 இல் வாட்ஸ்-ஆப் தொடங்கினார். வேலை தர மறுத்த அதே ஃபேஸ்புக், 2014 இல் 19 பில்லியன் டாலர் (சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்) ஜான் கோமுக்குத் தந்து, வாட்ஸ்-ஆப் கம்பெனியை விலைக்கு வாங்கியது.

****

திருமணமாகாத வேலைக்காரிப் பெண்ணுக்கு மகளாகப் பிறந்தார். வறுமை, வறுமை. உடை வாங்கக் காசு கிடையாது. கடைகளுக்கு உருளைக் கிழங்குகள் வரும் சாக்குப் பைகளை அம்மா பொறுக்கிவந்து தைக்கும் உடைகள். 9 வயதில் பாலியல் வன்முறை, 14 வயதில் திருமணமா காமலேயே முதல் தாய்மை, குழந்தை யின் அகால மரணம் எனக் கண்ணீரில் எழுதப்பட்ட இளமை. இன்று இந்தப் பெண் - அமெரிக்க மீடியா மகாராணி: ஹார்ப்போ புரொடக்‌ஷ்ன்ஸ் என்னும் ஊடக நிறுவன உரிமையாளர்: பல விருதுகள் வென்ற தொலைக்காட்சிப் பேட்டியாளர்: இருபதாம் நூற்றாண் டின் அமெரிக்கக் கறுப்பு இனத் தவர்களி லேயே மிகுந்த செல் வம் கொண்ட கோடீஸ்வரி - ஓப்ரா வின்ஃப்ரே.

****

ஆப்பிள் கம்பெனியை அகில உல கமும் அறிய வைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆரக்கிள் கம்பெனி ஆரம் பித்த ஜார்ஜ் எலிசன் ஆகி யோர் அப்பா யாரென்றே தெரியாத களங்கத்தோடு வளர்ந்தவர் கள்.

*118 நாடுகளில் இருக்கும் 36,000 கிளைகள் வழியாகப் பல நூறு கோடி மக்களின் நாவுக்குச் சுவை தந்து, வருடத்துக்கு 35 பில்லியன் டாலர்கள் விற்பனை குவிக்கும் மெக்டொனால்ட்ஸ், அமெரிக்காவின் ரேமன்ட்க்ராக் 1954 ஆம் ஆண்டு, தன் 50 ஆம் வயதில் தொடங்கிய உணவு விடுதி. அதுவரை அவர் சந்தித்தவை எல்லாமே தோல்விகள், நஷ்டங்கள்.

****

ODC Construction அமெரிக்கா வின் புளோரிடா மாகாணத்தின் நம்பர் 1 வீடு கட்டும் நிறுவனம். வருடம் 70 மில்லியன் டாலர் வருமானம். 2011- இல் ODC கம்பெனி தொடங்கியவ ரும், சி.இ.ஓவுமான ஐசக் லிட்ஸ்க்கி, கம்பெனி கட்டியுள்ள பல நூறு வீடு களில் ஒன்றைக்கூடப் பார்த்ததில்லை. ஏன் தெரியுமா? பார்வைக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, 2000 த் திலேயே, தன் கண் பார்வையை இழந்துவிட்டார்.

*Dyslexia என்பது ஒருவகை நரம்புக் கோளாறு. இந்த நோய் இருந் தால், இயல்பான அறிவுத்திறன் இருந் தாலும், சொற்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது, உச்சரிக்க முடியாது. வால்ட் டிஸ்னி, ஃபாஷன் உடைகள் தயாரிக் கும் டாமி ஹில்ஃபிகர் ஆகியோ ருக்கு டிஸ்லெக்‌ஷியா நோய் உண்டு.

*உலகெங்கும் புகழ்பெற்ற டைம், ஃபார்ச்சூன், லைஃப், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஆகிய பத்திரிகைக ளின் பதிப்பாளரும் உரிமையாளருமான ஹென்றி லூஸ் பேசவே திணறுவார். அவருக்குத் திக்கு வாய்.

பணம், படிப்பு, செல்வாக்கு கொண்ட குடும்பம், குறிப்பிட்ட வயது, ஆரோக் கியம் ஆகியவை இல்லாமலேயே இவர் கள் பிசினஸில் சிகரம் தொட்டிருக் கிறார்கள். நீங்கள் இப்போது என்ன நினைக்கி றீர்கள் என்று சொல்லட்டுமா? “இந்த வெற்றிக் கதைகள் எல்லாமே, வெளி நாடுகளில் நடந்தவை. இந்தியா வில் இதுபோல் நடக்கவே முடியாது.”

முடியும்! முடியும்! முடியும்! அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாகச் சொல்கிறேன்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x