பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு, கடன் முகாம்
சென்னை: ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' வார விழாவின் ஒரு பகுதியாக பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் வாடிக்கையாளர் விழிப் புணர்வு, கடன் வழங்கும் முகாம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும்தலைமைச் செயல் அதிகாரி ஏ.கே.தாஸ், தென்னிந்தியாவுக்கான தேசிய வங்கிக் குழு பொது மேலாளர் எஸ்.பி.ராய், சென்னை மண்டல மேலாளர் எஸ்.தேவசேனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவின்போது, தமிழகம் முழுவதும்பல்வேறு திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்குகடன் அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன. தென்னிந்தியாவுக்கான தேசிய வங்கிக் குழுவின் சார்பில் ரூ.350 கோடிக்கான கடன் அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், சில்லறை விற்பனை மற்றும் அரசின் திட்டங்களான ஸ்டேண்ட் அப் இந்தியா, பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் நிதி, முத்ரா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் இந்த அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் பெண்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், விவசாயிகள் என 2,000 பயனாளிகளுக்கு ரூ.100 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டன.
விழாவின்போது, அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி சுரக்சா பீமா திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
5,069 பேருக்கு முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்பட்டது. இவ்வாறு பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
