

புதுடெல்லி: இந்திய வாகன சந்தையில் 2022 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி அறிமுகமாகி உள்ளது. இதனை விலை ரூ.7.53 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
தென் கொரிய நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஹூண்டாய் மோட்டார் கம்பெனி. இந்தியா உட்பட உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் சார்பில் கார் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். டாடா நெக்ஸான், மாருதி சுசூகி Vitara Brezza, ரெனால்ட் Kiger மற்றும் நிசான் Magnite போன்ற கார்களுக்கு விற்பனையில் சவால் கொடுக்கும் என தெரிகிறது.
இந்த எஸ்யூவி ஐந்து விதமான வேரியண்ட்டுகளில் அறிமுகமாகி உள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடும் போது இதன் சேசிஸ் மற்றும் பாடி ஷெல்லில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. ஆனால் முன்பக்கத்தில் பெரிய அளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப், பம்பர் போன்றவற்றிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரின் அழகை எடுத்து சொல்லும் விதமாக அமைந்துள்ளது டைமண்ட் கட் அலாய் வீல்கள். இண்டீரியரிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக பின்பக்கம் அமர்ந்து செல்லும் பயனர்களுக்காக கூடுதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
எக்கோ, நார்மல், ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகள் இதில் உள்ளன. ஏழு விதமான வண்ணங்களில் புதிய வென்யூ கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.7.53 என தெரிவிக்கப்பட்டுள்ளது.