விமான எரிபொருள் விலை 16% உயர்வு: கட்டணமும் அதிகமாகும்?

விமான எரிபொருள் விலை 16% உயர்வு: கட்டணமும் அதிகமாகும்?
Updated on
1 min read

புதுடெல்லி: ஏடிஎப் எனப்படும் விமான எரிபொருள் விலை இன்று ஒரே நாளில் 16 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டதால் விமான டிக்கெட் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஷெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களே விமான நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகின்றன.

அதேசமயம் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளான ஏடிஎப் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதியும் 16-ம் தேதியும் மாற்றியமைக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, சா்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயா்ந்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த மாா்ச் 16-ம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ. 17,135.63 உயா்த்தப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,563.947 குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜூன் 16-ம் தேதியான இன்று விமான எரிபொரும் விலை 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் டெல்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.19,757.13 உயா்ந்து ரூ.1,41,232.87-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான செலவு கணிசமாக அதிகரிக்கும். இதனால் விமான நிறுவனங்களை கவலையில் ஆழ்ந்துள்ளன. இதன் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in