Published : 15 Jun 2022 02:06 PM
Last Updated : 15 Jun 2022 02:06 PM

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் Valar 4.0 வலைதளம்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள் அடங்கிய வளர் வலைதளத்தை அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட வளர் (Valar 4.0) என்ற வலைதளத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துகளைப் பரிமாறவும், பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகாணவும், 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடையவும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வளர் (Valar 4.0) வலைதளத்தை உருவாகியுள்ளது.

இந்த வலைதளத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள், மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.

மேலும், தொழில் துறையினர், சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருட்களின் தொகுப்புத் தேவைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளனர். 29 நகரங்களிலிருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் இந்த இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x