Published : 15 Jun 2022 07:52 AM
Last Updated : 15 Jun 2022 07:52 AM

பாலிசிதாரர்களுக்கு பாதுகாப்பு, சேமிப்பை வழங்கும் வகையில் எல்ஐசியின் ‘தன் சஞ்சய்’ புதிய திட்டம் அறிமுகம்

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) 'தன் சஞ்சய்' என்ற பெயரில் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல்ஐசி நிறுவனம் சார்பில்‘தன் சஞ்சய்’ என்ற பெயரில் பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர், சேமிப்பு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பாலிசிதாரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வழங்குகிறது. இது முதிர்வுகாலத்தில் உத்தரவாதமான வருவாயை வழங்கும் திட்டமாகும்.

இந்த புதிய திட்டம் 5 முதல்அதிகபட்சமாக 15 ஆண்டுகாலத்துக்கு கிடைக்கிறது. பாலிசி பிரீமியத்தை பாலிசிதாரர் ஒரே தவணையாகவோ, தங்களுக்கு ஏற்ற வகையிலோ செலுத்த வசதி உள்ளது. பாலிசிதாரர் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டால், அவர்தேர்வு செய்தபடி அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை மொத்தமாகவோ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையாகவோ வழங்கப்படும்.

அவசர தேவைக்கு பாலிசி தொகையில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளவும் இதில் வசதி உள்ளது. பாலிசி காலத்துக்கு ஏற்ப 3 வயது முதல் பாலிசி திட்டத்தில் சேர முடியும். எல்ஐசி முகவர்கள் மூலமோ, கிளைகள் மூலமோ, சேவை மையங்கள் மூலமோ இந்த பாலிசி திட்டத்தில் சேர முடியும். www.licindia.in. என்ற இணையதளம் மூலமும் இந்த பாலிசி திட்டத்தில் சேரலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x