

புதுடெல்லி: புதிய உச்சத்தைத் தொட்டுள்ள பணவீக்கம் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில், 2022 மே மாதத்தில் 15.88 சதவீதமாக உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: 2021 மே மாதத்தில் 13.11 சதவீதம் என்பதுடன் ஒப்பிடுகையில், 2022 மே மாதத்தின் வருடாந்திர பணவீக்க விகிதம் 15.88 சதவீதமாக உள்ளது. தாது எண்ணெய், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் கச்சா பொருட்கள், உணவுப் பொருட்கள், மூல உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட அதிகரித்திருப்பதால் 2022 மே மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் இன்று செவ்வா வெளியிட்டது.
இந்த விலைக் குறியீட்டெண் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி வெளியிடப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தோராயமான பணவீக்க விகிதம், பத்து வாரங்களுக்கு பின்னர் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.