ஜூனில் ரூ.14,000 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

ஜூனில் ரூ.14,000 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்
Updated on
1 min read

மும்பை: ஜூன் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து ரூ.14,000 கோடி அந்நிய நேரடி முதலீடு வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இவ்வாண்டு தொடக்க முதலாக வெளியேறிய அந்நிய நேரடி முதலீடு ரூ.1.81 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, விநியோக நெருக்கடி ஆகிய காரணிகளால் வெளிநாட்டு முதலீட்டாளர் கள் இந்தியப் பங்குகளை விற்றுவருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வெளியேறுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

இன்னும் 3 மாதங்கள் ஆகும். இம்மாத தொடக்கம் முதலே இந்தியப் பங்குச் சந்தையில் சரிவுகாணப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர்,பணவீக்கம் போன்ற காரணிகளால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் ஸ்திரமற்ற நிலையில்உள்ளன. பங்குச் சந்தைகள் நிலைத் தன்மை அடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்றும் அதுவரையில் இந்தியாவில் அந்நிய முதலீடு வெளியேற்றம் தொடரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in