

அமெரிக்காவைச் சேர்ந்த மரபணு மாற்ற விதை உற்பத்தி நிறுவனமான மான்சான்டோ நிறு வனத்தை வாங்க ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் ஏஜி நிறுவனம் முன்வந்துள்ளது. முழுமையான தொகையாக 6,200 கோடி டாலர் அளித்து வாங்கத் தயாராக இருப் பதாக பேயர் அறிவித்துள்ளது.
மான்சான்டோ நிறுவனத் தயா ரிப்புகள் இந்தியாவில் பரவலாக விற்கப்படுவதால், இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு கணிசமான சந்தை உள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு மூன்று பிரி வுகள் உள்ளன. மான்சான்டோ இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்), மான்சான்டோ ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (எம்ஹெச் பிஎல்) மற்றும் கூட்டு நிறுவன மான மேஹோ மான்சான்டோ பயோடெக் இந்தியா லிமிடெட் (எம்எம்பிஎல்) ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் செயல்படுகிறது. இவற்றில் ஒட்டுமொத்தமாக ஆயி ரத்துக்கும் மேலான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் எம்ஐஎல் நிறுவனம் மட்டும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.580 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
மே 9-ம் தேதி மான்சான்டோ நிறுவன பங்கு விலை 89.03 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது. இதைவிட 37 சதவீதம் கூடுதலாக அதாவது 122 டாலர் விலையில் வாங்கத் தயாராக இருப்பதாக மான்சான்டோ நிறுவனத்துக்கு பேயர் நிறுவனம் மே 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.