தனது ஊழியர்கள் 3,000 பேருக்கு ஸ்பெயினில் விருந்தளித்த சீன தொழிலதிபர்

தனது ஊழியர்கள் 3,000 பேருக்கு ஸ்பெயினில் விருந்தளித்த சீன தொழிலதிபர்
Updated on
1 min read

சீனாவில் டியான்ஸ் குழும நிறு வனர் தனது ஊழியர்கள் 3,000 பேரை ஸ்பெயினுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றதுடன் அங்கு அவர்களுக்கு ஸ்பெயின் நாட் டின் பாரம்பரிய உணவான பயிலா என்கிற உணவு விருந்து அளித்துள் ளார். நிறுவனத்தின் முன்னணி விற்பனை பிரதிநிதிகளுக்கு இந்த விருந்துடன் காளைப் போட்டிகளை கண்டுகளிக்கும் வாய்ப்பு மற்றும் ஆறாவது பிலிப் மன்னரது அரண்மனையைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பையும் அளித்துள்ளார். நிறுவனரின் மகன் லீ ஸோங்மின், இது குறித்து கூறும்போது இந்த ஆண்டின் ஊக்க பயணத் திட்டத்தில் ஸ்பெயினை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாறுதான். மேலும் சுவையான உணவுகள் கால்பந்து போன்றவையும் ஸ்பெயினை தேர்ந்தெடுக்க காரணம் என்றார்.

இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்த யு டூர் டிராவல் நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் ஸாங் ஜிலய் குறிப்பிடும்போது டியான்ஸ் குழுமத்தின் ஹெல்த் கேர் பொருட்களை 80 லட்சம் டாலர் அளவுக்கு விற்பனை செய்த விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்றார். கடந்த ஆண்டு 6,400 பணியாளர்கள் பிரான்ஸ் அழைத்து செல்லப் பட்டனர். அதனை தொடர்ந்து இப்போது ஸ்பெயினுக்குச் சென்றிருக்கின்றனர்.

விற்பனை இலக்கில் வெற்றி பெறுபவர்கள்தான் இதில் கலந்து கொள்ள முடியும் என்பதால், இந்த ஆண்டு சீனாவில் விற்பனை பிரதிநிதிகளிடையே கடும்போட்டி இருந்தது என்றும் ஸாங் கூறினார்.

அடுத்த வருடமும் ஊழியர் களை சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் இருக்கிறது, ஆனால் எந்த இடம் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஸாங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in