

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.73.19 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதோடு தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.22.52 கோடியாக இருந்தது.
மார்ச் வரையான காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,474.99 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.790.91 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.1,460.19 கோடி. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.687.05 கோடியாக இருந்தது.
2015-16-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.407.19 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.687.05 கோடியாக இருந்தது.
மிகுந்த கடன் சுமையில் இருந்த நிறுவனம் தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியதோடு நிதி நிலையும் சிறப்பான அளவுக்கு முன்னேறி யுள்ளது. இதனால் நிறுவன நிதி நிலை அறிக்கையும் லாபகரமாக அமைந்துள்ளது என்று அஜய் சிங் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.