Published : 10 Jun 2022 08:40 PM
Last Updated : 10 Jun 2022 08:40 PM
புதுடெல்லி: இந்தியாவின் ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்மாட்டு ஆணையத்தின் முயற்சியால் லண்டனில் நடைபெற்ற ஒயின் கண்காட்சியில் இந்திய ஒயின் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒயின் தொடர்பான உலகின் மிக முக்கியமான வணிக சந்தையாக லண்டன் ஒயின் கண்காட்சி கருதப்படுகிறது. இந்தக் கண்காட்சி 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை லண்டனின் நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சியால் 10 இந்திய ஒயின் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
ரெஸ்வேரா ஒயின்ஸ், சுலா ஒயின் யார்ட்ஸ், குட்டிராப் ஒயின் செல்லர்ஸ், ஹில் ஜில் ஒயின்ஸ் உள்ளிட்ட இந்திய ஒயின் ஏற்றுமதியாளர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றனர்.
உலக அளவில் மதுபானங்களுக்கான ஏற்றுமதி சந்தையில் 3-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், தானியங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 33,919 கிலோ லிட்டர் மதுபானம் தயாரிக்க உரிமம் பெற்ற 12 நிறுவனங்கள் இங்கு உள்ளன. இவை இந்திய அரசின் உரிமம் பெற்று 56 யூனிட் அளவிற்கு பீர் தயார் செய்கின்றன.
2020-21-ம் ஆண்டில், இந்தியா, 322.12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய, 2.47 லட்சம் மெட்ரிக் டன் மதுபானப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2020-21-ல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கானா, கேமரூன், காங்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மதுபானப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
மால்ட்-லிருந்து தயாரிக்கப்படும் பீர், ஒயின், வெயிட் ஒயின், பிராண்டி, விஸ்கி, ரம், ஜின் போன்ற இந்திய மதுபான தயாரிப்புகளுக்கு உலக அளவில் பெரும் தேவை உள்ளது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT