Published : 15 May 2016 11:29 AM
Last Updated : 15 May 2016 11:29 AM

4 பைசர் பிராண்டுகளை வாங்கியது பிரமல்

அஜய் பிரமல் தலைமையில் இயங்கும் பிரமல் என்டர்பிரை சஸ் நிறுவனம், பைசர் குழுமத் தின் நான்கு பிராண்டுகளை 110 கோடி ரூபாய்க்கு கையகப் படுத்துகிறது. பெர்ராடோல், நெகோ, ஸ்லோன் அண்ட் வாட்டர்பரி ஆகிய பிராண்ட்களை கையகப்படுத்த உள்ளது.

நுகர்வோர் பொருட்கள் பிரிவில் பிரமல் நிறுவனம் இந்தியாவில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. 2020-ம் ஆண்டுக்குள் முதல் மூன்று இடங்களுக்குள் வர பிரமல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் நந்தினி பிரமல் தெரிவித்தார். இந்த பிராண்டுகளை வாங்கி இருப்பதன் மூலம் அந்த இலக்கை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம், ஹெல்த்கேர், ஹெல்த்கேர் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட் மற்றும் பைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x