Published : 07 May 2016 10:04 AM
Last Updated : 07 May 2016 10:04 AM

தங்கம் விலை உயர்வு அட்சய திருதியை விற்பனையை பாதிக்கும்: வர்த்தகர்கள் கவலை

தங்கத்தின் விலை அதிகரித்து வருவ தால் அட்சய திருதியை நாளில் விற்பனை அதிகம் இருக்காது என்று தங்க நகை வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தங்க நகைகள் வாங்குவதற்கு உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் 10 கிராம் தங்கத் தின் விலை 26,930 என்ற விலையில் இருந்தது. தற்போது ரூ.30,050 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனால் மே 9-ம் தேதி அதா வது அட்சய திருதியை தினத்தன்று வர்த்தகம் கடந்த ஆண்டைக் காட்டி லும் சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் மிக அதிக அளவு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று அகில இந்திய ஜெம்ஸ் அண்டு ஜுவல்லரி வர்த்தக சம் மேளனத்தின் தலைவர் ஜி.வி. தர் தெரிவித்துள்ளார்.

தங்க நகை விற்பனை அதிகரிப் பதற்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளன. இருப்பினும் அதிகரித்து வரும் விலை உயர்வு காரணமாக அதிக அளவில் தங்க நகைகள் வாங் குவது குறையும் என்றும் மக்கள் சிறிய எடை குறைந்த நகைகளை வாங்குவர் என்றும் குறிப்பிட்டார்.

தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் நாடு முழுவதும் அதிக வெப்ப மான பருவநிலை நிலவுவது காரண மாக விற்பனை கடந்த ஆண்டு போல இருக்காது என்று தங்க ஜூவல்லரி சம்மேளனத்தின் முன்னாள் தலை வர் பச்ராஜ் பமல்வா கூறினார்.

இந்த ஆண்டு வாடிக்கையாளர் களின் வருகை 10 சதவீதம் குறை வாக இருக்கும். இருப்பினும் விற் பனை அளவு கடந்த ஆண்டைப் போலவே இருக்கும் என்றார். விலை அதிகரிப்பின் காரணமாக அதிக விலைக்கு தங்கம் வாங்குவது இருக்காது என்று அவர் கூறினார்.

திருமண ஆபரண நகைகள் விற் பனை குறித்து அவர் கூறியபோது, வழக்கம்போல இதற்கான முன்பதி வுகள் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே இருக்கும் என்றும், இதில் அதிகபட் சமான முன்பதிவுகள் வேலைநிறுத் தம் முடிவடைந்த அப்போதே முடிந்துவிட்டன என்றும் கூறினார்.

உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் கூறியபோது அட்சய திருதியை அன்று தங்கத்தின் தேவை அதிகரிக் கும். திருமண தங்க நகைகள் மற் றும் முதலீடு சார்ந்த தங்க காசுகள், தங்க கட்டிகள் விற்பனை அதிகமாக இருக்கும். விலை காரணமாக தேவை குறையாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x