Published : 06 Jun 2022 06:12 PM
Last Updated : 06 Jun 2022 06:12 PM

பிக்சட் டெபாசிட்: யாருக்கு உகந்த முதலீடு? - ஒரு விரைவுப் பார்வை

முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு இருப்பது அவசியம் என்பது எந்த ஒரு முதலீட்டாளர்களுக்கும் உண்டான அடிப்படையான எண்ணம். இதன் காரணமாக உலகம் முழுவதும் ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் எப்போதுமே அதிகமோனார் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் முதலில் இருப்ப்து பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை.

பிக்சட் டெபாசிட்களில் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கிடைக்கும். ரிஸ்க் என்பது இல்லை. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக இது பார்க்கப்படுகிறது. வயதான காலத்தில், திடீர் பணத் தேவை ஏற்படக்கூடிய நபர்களுக்கு ஏற்ற திட்டமாக பிக்சட் டெபாசிட் கருதப்படுகிறது.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்: வட்டியை மாதம் தோறும் பெறுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, ஆண்டுக்கு ஒருமுறை பெறுவது மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவது என நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான பத்திரம் உங்களுக்கு வழங்கப்பட்ட பின்பு வட்டி விகிதங்கள் மாறினாலும் வழங்கப்படும் வட்டி மாறாது. எனவே வைப்புத்தொகையில் உத்தரவாதமான வருமானத்தை பெற முடியும். கால அடிப்படையில் அல்லது முதிர்வு காலத்திலும் வட்டியை பெறலாம்.

பிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்சூரன்ஸ்

2 கோடி ரூபாய் நிதியை மட்டுமே பிக்சட் டெபாசிட்டில் ஒருவர் முதலீடு செய்ய முடியும். பிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பும் உள்ளது. அதாவது எந்தவொரு வங்கி திவாலானாலும் அதன் பாதகமான விளைவுகளில் இருந்து வைப்புத் தொகையாளர்களைப் பாதுகாப்பதே டெபாசிட் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.

ஒரு வங்கியில் ஒருவர் எவ்வளவு தொகை பிக்சட் டெபாசிட்டில் வைத்திருந்தாலும் 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே இன்சூரன்ஸ் பாதுகாப்பு பெற முடியும். எனவே 5 லட்சத்துக்கு அதிகமான தொகையை பிக்சட் டெபாசிட் செய்பவர்கள் வெவ்வேறு வங்கிகளில் இதனை டெபாசிட் செய்வது சரியான நடவடிக்கை என நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

புதுப்பிக்காவிட்டால் வட்டி குறையும்

நிலையான வைப்பு தொகை நிதியை முதிர்வு காலம் முடிந்த பின்னர் எடுக்காமல், மீண்டும் வைப்பு தொகை திட்டத்தில் வைப்பு வைத்து தொடரவும் செய்யலாம். இதன் மூலம் கூடுதல் வட்டி வருவாய் கிடைக்கும்.

அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத் தொகைக்கான வட்டி சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும். எனவே வைப்புத் தொகை முடிவடையும் காலத்தை சரியாக பார்த்து புதுபிக்க வேண்டும்.

பொதுவாக மிகவும் பாதுகாப்பான முதலீடாக பிக்சட் டெபாசிட் திட்டம் கருதப்படுகிறது. நிலையான வைப்பு தொகை என்பது சேமிப்புகளை மிகவும் பாதுகாப்புடன் வளர்ப்பதற்கான வழி என்பதால் இந்த முதலீடுகளுக்கு எப்போதுமே முதலீட்டாளர்களிடம் ஆர்வம் உள்ளது.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x