

மின்சார வாகனத்தின் பதிவு மாதாந்திர விற்பனை 20 சதவீதம் சரிவு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாஹன் (VAHAN) தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதத்தில் சரிவு என தகவல்.
இந்த சரிவு தற்காலிகம் தான் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சரிவு அதிகபட்சம் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் சீரடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வாகனங்களுக்கான தேவை அதிகம் இருப்பதே அதற்கான காரணம் என தெரிகிறது. அண்மைய காலமாக மின்சார இருசக்கர வாகனத்தின் மீதான பாதுகாப்பு தர அம்சம் மற்றும் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இருந்தாலும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்கள் இ-ஸ்கூட்டர் வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக தாமதப்படுத்தி உள்ளது இதற்கு மற்றொரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக், பஜாஜ் ஆட்டோ, ரிவோல்ட் மோட்டார், ஓலா, டிவிஎஸ், ஒகினாவா, Ampere போன்ற நிறுவனங்கள் விற்பனையில் சரிவு கண்டுள்ளது. இதற்கு செமிகன்டக்டர் சிப் உட்பட சில மூலப்பொருள் தட்டுப்படும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.