

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து 334.50 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 195.28 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல நிகர விற்பனையும் 46 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 2,532 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 3,702 கோடி ரூபாயாக இருக்கிறது.
மார்ச் காலாண்டில் ராயல் என் பீல்டு விற்பனை சிறப்பான இருந் தது. இந்த நிதி ஆண்டில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட் டிருப்பதாகவும், இந்த நிதி ஆண்டில் 6.75 லட்சம் மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப் பதாகவும் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த்த லால் தெரிவித்தார். ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 61 சதவீதம் உயர்ந்து 1,082 கோடி ரூபாயாக இருக்கிறது.