Last Updated : 26 May, 2016 09:46 AM

 

Published : 26 May 2016 09:46 AM
Last Updated : 26 May 2016 09:46 AM

பியூச்சர் ஜெனரலி நிறுவனத்துக்கு ரூ.35 லட்சம் அபராதம்

பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) ரூ.35 லட்சம் அபராதம் விதித்துள்ளது. காப்பீட்டு முகவர்களுக்கான லைசன்ஸ், பணப் பரிமாற்றம் மற்றும் பல்வேறு காப்பீடு சட்டங்களை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஆர்டிஏஐ வெளியிட்டுள்ள உத்தரவில், அப ராதம் ரூ.35 லட்சம் நேரடியாக பங்குதாரர்களில் கணக்கிலிருந்து பிடிக்கப்படும் என்று குறிப்பிட் டுள்ளது. இந்த தொகையை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் ஐஆர்டிஏஐ உத்தரவிட் டுள்ளது.

நிறுவனம் மூன்றாம் நபர் மூல மாக பணம் திரட்டியது கண்டறியப் பட்டது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இவற்றை ஒழுங்குமுறை அமைப்பிலும் தெரிவிக்கவில்லை.

இது காப்பீடு சட்டத்தை மீறும் செயல். இதற்காக 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இன்ஷூரன்ஸ் முகவர்களுக்கு இந்த நிறுவனம் தெளிவான பயிற்சிகளை அளிக்கவில்லை என்பதற்காக கூடுதலாக 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் முகவர்களின் லைசென்ஸ்கள் காலாவதி ஆன பிறகும் செயல்பட அனுமதித்துள்ளது.

ஒரே வாடிக்கையாளருக்கு பல முறை பாலிசி விநியோகித் துள்ளது மற்றும் காப்பீடு ஒழுங்கு முறைகளை மீறி இன்ஷூரன்ஸ் தகவல்களை பரிமாற்றம் செய் ததற்காக 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆவணங் களை மீறி பாலிசி பயன்படுத்திய காரணங்களுக்காகவும் இதே அளவு தொகை அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

பியூச்சர் ஜெனரலி நிறுவனம் குற்றச்சாட்டுகளை ஒத்துக் கொண்டு காப்பீடு விதிமுறை களை மதித்து நடக்க வேண்டும் என ஐஆர்டிஏஐ உத்தரவிட் டுள்ளதாக கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x