இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர்: நீல்சன் நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர்: நீல்சன் நிறுவன ஆய்வில் தகவல்
Updated on
1 min read

2016 நிதியாண்டின் முதல் காலாண்டை பொறுத்த வரை வேலைவாய்ப்பு மற்றும் தனி நபர் நிதி சார்ந்த விஷயங்கள் ஆகி யவற்றில் இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என சர்வதேச செயல்திறன் மேலாண்மை நிறுவனமான நீல்சன் இந்தியா கூறியுள்ளது. சர்வ தேச அளவோடு ஒப்பிடும் பொழுது இதுபோன்ற அளவுகளில் இந்தி யர்கள் மிக நம்பிக்கையாக இருக் கின்றனர். கடந்த 9 ஆண்டுகளை விட தற்போது இந்தியர்களின் நம்பிக்கை குறியீடு அதிகரித் துள்ளது என்று நீல்சன் இந்தியா தெரிவித்துள்ளது.

முதல் காலாண்டில் நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டில் இந்தியா 134 புள்ளிகளை பெற்றுள்ளது. 2007-ம் ஆண்டு 131 புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 3 புள்ளிகள் தற்போது அதிகரித்துள்ளது என்று நீல்சன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்திய நுகர்வோரின் நம்பிக்கை குறியீடு உயர்ந்த போதிலும், அதிகமான நகர்ப்புற இந்திய மக்கள் அதா வது 53 சதவீத நகர்ப்புற மக்கள், நாடு பொருளாதார மந்தநிலையில் தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று நீல் சன் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி இந்தியா விற்கு அடுத்தபடியாக 119 புள்ளி களுடன் பிலிப்பைன்ஸ் உள்ளது. பிலிப்பைன்ஸுக்கு அடுத்தப் படியாக 117 புள்ளிகளுடன் இந் தோனேசியா உள்ளது. பத்து புள்ளிகள் அதிகரித்து அமெரிக்கா 110 புள்ளிகளை பெற்றுள்ளது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து 97 புள்ளிகளை பெற்றுள்ளன. ஜப்பான் 73 புள்ளிகளை பெற்றுள்ளது.

63 நாடுகளில் வசிக்கும் 30,000 ஆன்லைன் நுகர்வோரிடம் இந்த ஆய்வை நீல்சன் நிறுவனம் நடத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in