Published : 31 May 2022 06:46 AM
Last Updated : 31 May 2022 06:46 AM
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ‘பீமா ரத்னா’ என்ற புதியபாலிசித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வழங்கும் தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட பிரீமியம், பணத்தை திரும்பப் பெறும்வசதிகள் இதன் சிறப்பு அம்சங்கள்.
இந்தப் பாலிசியை 15, 20, 25 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். பிரீமியம் செலுத்தும் காலம் பாலிசி காலத்தைவிட 4 ஆண்டுகள் குறைவு. பாலிசி காலத்தின் கடைசி2 ஆண்டுகளுக்கு, ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் அடிப்படைத் தொகையில் தலா 25 சதவீதம் தொகை, ஆயுள் பயனாக வழங்கப்படும்.
காப்பீட்டுக் கால முடிவில் எஞ்சிய 50 சதவீதம் தொகை, இதர பயன்களுடன் சேர்த்து வழங்கப்படும்.
காப்பீட்டுக் காலத்தில் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தால், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படும். இது அடிப்படைத் தொகையில் 125 சதவீதம் அல்லது ஆண்டு பிரீமியத்தின் 7 மடங்கைவிட அதிகமாகும். தவிர, செலுத்திய மொத்த பிரீமியத்தில் 105 சதவீதத்துக்கு இது குறையாது.
இந்த திட்டத்தில் கடன் வசதியும் உண்டு. நிபந்தனைக்கு உட்பட்டு கூடுதல் பிரீமியம் செலுத்தி, வரம்புகளை நீட்டிக்கலாம். விருப்பப்பட்டால், இறப்புக்கான பயன் அல்லது முதிர்வுத் தொகையை மொத்தமாகப் பெறாமல், 5 ஆண்டுகளில் தவணையாகவும் பெறலாம்.
இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம். இதைரூ.25,000-ன் மடங்குகளில் அதிகரித்துக் கொள்ளலாம். உச்சவரம்பு இல்லை. குறைந்தபட்ச வயது 90 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை. எல்ஐசியின் கார்ப்பரேட் முகவர்கள் (வங்கிகள் உட்பட), காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தரகர்கள் உள்ளிட்டோர் மூலமாக மட்டுமே இந்த பாலிசியை வாங்க முடியும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய, மும்பை தலைமை அலுவலகத்தின் செயல் இயக்குநரை ed_cc@licindia.com என்றஇ-மெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம். எல்ஐசி நிறுவனத்தின் www.licindia.in இணையதளத்தையும் பார்க்கலாம் என்றுஎல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT