

பட்ஜெட் விமான நிறுவனங்கள் சலுகை கட்டணத்தை அறிவித்ததை அடுத்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் கட்டண சலுகையை அறிவித்தது. குறிப்பிட்ட காலத்துக்கு இந்த சலுகையை ஏர் இந்தியா அறி வித்திருக்கிறது. உள்நாட்டு போக்குவரத்துக்கு 1,499 ரூபாய்க்கு பயணம் செய்ய முடியும்.
`சூப்பர் சேல் ஆபர்’ என்னும் சலுகையில் வரும் 25-ம் தேதி வரை சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் ஜூலை முதல் செப்டம்பர் 30 வரையிலான கால கட்டத்தில் பயணம் செல்வதற்கு வரும் 25-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்திருக்கிறது.
பொதுவாக ஜூலை முதல் செப்டம்பர் மற்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் விமான போக்குவரத்தில் மந்த மான சூழல் இருக்கும். பயணி களின் எண்ணிகையை அதிகரிப்ப தற்காகவே இதுபோன்ற கட்டண சலுகை அறிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் கட்டண சலுகையை அறிவித்தன. ஸ்பைஸ்ஜெட் கட்டணம் 511 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இண்டிகோவின் சலுகை கட்டணம் 800 ரூபாயிலிருந்தும், ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் பல வழித் தடங்களில் டிக்கெட் கட்டணத்தை பாதியாகவும் குறைத்துள்ளது.