காப்பீடு நிறுவனங்கள் ஐபிஓ விதிமுறைகளில் திருத்தம் செய்ய ஐஆர்டிஏஐ திட்டம்

காப்பீடு நிறுவனங்கள் ஐபிஓ விதிமுறைகளில் திருத்தம் செய்ய ஐஆர்டிஏஐ திட்டம்
Updated on
1 min read

காப்பீட்டு நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான விதிமுறை களில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பட்டு ஆணை யம் (IRDAI) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஆணையத்தின் தலைவர் டி.எஸ். விஜயன் காப்பீட்டு நிறுவனங்கள், விரைவில் வெளியிடப்படவுள்ள இந்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது: காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க முடிவெடுத்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடுகள் வந்துள்ளது. கடந்த ஆண்டு காப்பீடு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவுக்கு சந்தை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் வந்துள்ளன.

கடந்த ஆண்டில் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்ட விஜயன், ஆயுள் காப்பீட்டுத் துறை 12 சதவீத வளர்ச்சி அடைந்ததாகவும், ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனங்கள் 14 சதவீத வளர்ச்சி எட்டியதாகவும், மருத்துவ காப்பீட்டுத் துறை 40 சதவீத வளர்ச்சி எட்டியுள்ளது என்றும் கூறினார்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. இந்த நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது என்று குறிப்பிட்டவர், 2016-17 நிதியாண்டில் ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் அதிகரிக்கவில்லை. இது அதிகரிக்கும்பட்சத்தில் இந்த துறையின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று கூறினார்.

உறுதியாக சொல்லமுடியாது என்றாலும் ஒரு சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடப் போவதாக கேட்கும் என்று நினைக்கிறேன் என்றும் கூறினார். இந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் அது சந்தையில் பாதிக்கும் என்றார்.

இதனால் பழைய ஐபிஓ நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்து வருகிறோம் இந்த மாதத்துக்குள் அல்லது விரைவில் இந்த நடைமுறைகளை அறிவிப்போம் என்றும் கூறினார்.

சமீபத்தில் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனமும் ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in