Published : 18 May 2016 10:02 AM
Last Updated : 18 May 2016 10:02 AM

வரி ஏய்ப்பு குற்றச் செயல் அல்ல: பனாமா அமைச்சர் கருத்து

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று பனாமா நாட்டை அழைப்பது தவறானது. மத்திய அமெரிக்க நாட்டை பொறுத்தவரை வரி ஏய்ப்பு என்பது குற்றச்செயல் அல்ல. மேலும் இதுபோன்ற சூழ்நிலை களில் கிரிமினல் வழக்கு தொடரக் கூடாது என்று பனாமா நாட்டின் பன் னாட்டு விவகரங்கள் துறை அமைச்சர் மரியா லூயிசா நவாரோ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று வெளியு றவு துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜை சந்தித்த நவாரோ, பனாமா பேப்பர்ஸ் வெளியான விவகாரங் கள் குறித்து பேசினார். பனாமா விவகாரம் குறித்து இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றங்களையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று சுஷ்மா சுவராஜிடம் மரியா உறுதியளித்துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் வெளியானது பனாமா நாட்டில் ஒரு புயலை கிளப்பியுள்ளது. மேலும் நாட்டின் வெளிநாட்டு உறவுகளை மிக பாதித்திருக்கிறது. ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுடன் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து தகவல்களை பரிமாறிக் கொள்வதாக ஏற்கெனவே உறுதி யளித்துள்ளோம். மேலும் கொலம் பியா நாட்டுடன் தகவல் பரிமாறி கொள்வதற்கு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று மரியா தெரிவித்தார்.

பின்பு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது: இந்திய அரசு எந்த குறிப்பிட்ட தகவலையும் கண்டுபி டிக்க முயற்சி செய்தது என்பதை நான் உறுதிப்படுத்தமுடியாது. ஆனால் இருதரப்பிலும் நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைப்பு நிகழ்ந்தால் நாங்கள் அடுத்தடுத்த வருடங்களில் சில தகவல்களை பரிமாறிக் கொள்வோம். வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க நாடு அல்ல பனாமா. எங்கள் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இங்கு தங்கியுள்ளனர். மேலும் அவர்கள் எங்கள் நாட்டில் தொழில் செய்கின்றனர், வீடு வாங்கு கின்றனர் அதுமட்டுமல்லாமல் 35 சதவீதம் வரை வருமான வரி செலுத் துகின்றனர். குடிமக்கள் அல்லது வெளிநாட்டினர் பனாமா நாட்டில் தொழில் செய்து வருமானம் ஈட்டி னால் வருமான வரியும் விற்பனை வரியும் செலுத்த வேண்டும். ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவ னம் பனாமா நாட்டிற்கு வெளியே வருமானம் ஈட்டினால் பனாமா நாட்டின் சட்டத்தின் படி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது போன்ற சூழலில்தான் 500 இந்தியர்களின் பெயர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற் றுள்ளது. ஆனால் எத்தனை பேர் பனாமா நாட்டு சட்டத்தின் படி வருமா னத்தை ஈட்டினார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது.

எங்கள் நாட்டை பொறுத் தவரை வரி ஏய்ப்பு என்பது குற்ற மல்ல. இது போன்ற நடவ டிக்கை பல நாடுகளிலும் பின்பற்றப் பட்டு வருகிறது. மேலும் நிதிச் சேவைகளை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கடை பிடிக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். பனாமா விவகாரம் வெளியானது எங்கள் மீது தவறான கண்ணோட்டத்தை கொடுத்துள்ளது. ஆனால் இந்த கடுமையான சூழ்நிலையை மாற்றுவதற்கு முயன்று வருகி றோம். சர்வதேச அளவில் நிதிச் சேவைகளை வழங்குவதில் பனாமா நாடு பெருமை அடைகிறது. இவ்வாறு மரியா லூயிசா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x