

கடந்த இரு மாதங்களாக இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு உள்ளே வந்துகொண் டிருந்த சூழ்நிலையில், மே மாதத்தின் முதல் வாரத்தில் 774 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. மே முதல் வாரத்தில் சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிந்தது. மாறாக இதே காலத்தில் இந்திய கடன் சந்தையில் 769 கோடி ரூபாய் அந்நிய முதலீடு செய்யப் பட்டிருக்கிறது.
ஜிடிபி எதிர்பார்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்க ளால் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளி யேறி இருக்கலாம் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.