

கடந்த வாரத்தில் 7 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 67,233 கோடி சரிந்துள்ளது. இதில் டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தப்பியுள்ளன.
ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ. 35,548 கோடி சரிந்து ரூ. 3,61,426 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 12,251 கோடி சரிந்து ரூ. 3,49,763 கோடியாக இருந்தது. இதேபோல பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்புரூ. 9,391 கோடி சரிந்து ரூ. 1,94,583 கோடியானது.
ஐசிஐசிஐ வங்கி பங்கு மதிப்பு ரூ. 6,034 கோடியும், ஐடிசி ரூ. 2,584 கோடியும், கோல் இந்தியா ரூ. 1,200 கோடியும், லார்சன் அண்ட் டியூப்ரோ ரூ. 222 கோடியும் சரிந்தன. டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ. 25,590 கோடி உயர்ந்து ரூ. 4,33,799 கோடி ஆனது. இதேபோல இன்ஃபோசிஸ் மதிப்பு ரூ. 10,442 கோடி அதிகரித்து ரூ. 1,82,701 கோடியாக உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி மதிப்பு ரூ. 4,959 கோடி உயர்ந் ரூ. 2,01,175 கோடியானது.
முதல் 10 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்திலும், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஐடிசி, கோல் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் 168 புள்ளிகள் சரிந்து 25228 புள்ளிகளில் நிலைபெற்றது.