இந்தியாவில் 2022 கேடிஎம் RC 390 பைக் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் 2022 கேடிஎம் RC 390 பைக் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

புது டெல்லி: இந்தியாவில் ஆர்சி 390 பைக்கை அறிமுகம் செய்துள்ளது கேடிஎம். இந்த பைக்கின் விலை மற்றும் சில சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனமான கேடிஎம் நிறுவன தயாரிப்புக்கு என சந்தையில் தனி வரவேற்பு உண்டு. அதுவும் ஸ்ட்ரீட் பைக்குகளுக்கு தனி வரவேற்பு இருக்கும். அதில் ஒன்றுதான் 2022 ஆர்சி 390 பைக்.

முந்தைய மாடலை காட்டிலும் இதன் விலை கொஞ்சம் கூடுதலாக உள்ளது. கடந்த ஆண்டு இந்த பைக் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில், இப்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாடல் உடன் ஒப்பிடும்போது டிசைன் தொடங்கி அனைத்தும் இந்தப் புதிய பைக்கில் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது.

எடை குறைவான சப்-ஃபிரேம், சக்கரங்களில் மாற்றம், ஹேண்டில்பாரும் உயர்த்தப்பட்டுள்ளது. பைக்கை நீண்ட தூரம் ஓட்டும் போது பாதிப்புகள் ஏதும் இருக்காது என்பதால் இந்த ஏற்பாடாம்.

373 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், சிக்ஸ் ஸ்பீடு கியர் பாக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக் போன்றவை இடம்பெற்றுள்ளது.

புது டெல்லியில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3,13,922 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் விலையில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in