

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிக்க கூடாது என்றும் அதைத் தடுப்பதற்கு இன்னும் நிறைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசை பெற்ற இந்திய ருமான கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது அவரவர் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பிரிவுகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கட்டாய தொழிலாளர்கள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற கைலாஷ் சத்யார்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: மத்திய அரசு ஆள் கடத்தலுக்கு எதிரான புதிய சட்டத்தை கொண்டு வந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இந்த சட்டம் நிறு வனங்களுக்கு பாதகமானதாக இருக்கும். ஏனெனில் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் குழந்தை தொழிலாளர்களைப் பயன் படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு தேசிய மற்றும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனமும் தேசிய மற்றும் சர்வதேச சட்டங் களைக் கடைப்பிடிக்க வேண் டும். அவர்கள் இந்த மண்ணின் சட்டத்தை மீறுவதை அனுமதிக்க கூடாது. நம் நாட்டிற்கு என்று சட்டங்கள் உள்ளன. ஆள் கடத்தலுக்கு எதிரான தெளிவான சட்டமும் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. மேலும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு இன்னும் வலுவான சட்டமும் நுட்பங்களும் தேவை.
நுகர்வோர் மற்றும் ஊடகங் களின் அதிகாரம் எல்லா இடங்களிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நிறுவனங் கள் நுகர்வோரின் அதிகாரத்தை தவிர்த்து விட முடியாது. நிறுவனங்கள் நுகர்வோருக்கும் ஊடகங்களுக்கும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை சட்ட விரோதமானது மற்றும் நெறியற்றது. இந்தியா மட்டு மல்லை எந்தவொரு நாட்டிலும் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்கக் கூடாது. இவ்வாறு சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.
ஆள் கடத்தலுக்கு எதிரான புதிய சட்ட வரைவு திங்க ளன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய சட்டங்களை ஒன்று சேர்த்தது, அபராத தொகையை உயர்த் துவது, அதேபோல் பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுதான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
கடத்தல் தொடர்பான வழக்கு களில் மாநிலங்களுக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்கும் இடையே வேலை செய்வதற்கும் ஒருங்கி ணைப்பதற்கும் மத்திய விசாரணை அமைப்பை ஏற்படுத்த இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
சர்வதேச அளவில் கட்டாய தொழிலாளர்களாக பாதிக் கப்பட்டவர்கள் 2.1 கோடி மக்கள் உள்ளனர். இதன் மூலம் நிறுவனங் கள் சட்ட விரோதமாக 150 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகின்றன என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசியா முதல் லத்தீன் அமெ ரிக்கா வரை உள்ள 58 நாடுகளில் தயாரிக்கப்படும் 122 பொருட்கள் குழந்தை தொழிலாளர்களை வைத்து தயாரிக்கப்படுகின்றன என்று கட்டாய தொழிலுக்கு எதிரான சர்வதேச பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
கைலாஷ் சத்யார்த்தி நடத்தும் `பச்பேன் பச்சோ அந்தோலன்’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேலான குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.