

ஜகார்த்தா: உலகில் அதிக அளவில் பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இந்தோனேசியாவில் பாமாயில் விலை 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததால், உள்நாட்டில் பாமாயில் தாராளமாகக் கிடைக்கவும் விலையை கட்டுப்படுத்தவும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்தது.
இந்நிலையில், வரும் 23-ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா அறிவித்துள்ளார்.
உள்நாட்டில் பாமாயில் விநியோகத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதாலும் பாமாயில் துறையில் பணியாற்றும் 1.70 கோடி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.