

புதுடெல்லி: உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததை அடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மே 13 தேதி அன்று மத்திய அரசு தடை விதித்தது. இதனால் கோதுமை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்களில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், நேற்று மத்திய அரசு கோதுமை ஏற்றுமதி தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, மே 13 மற்றும் அதற்கு முன்பாக கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு பதிவு செய்திருந்தவர்கள், தற்போது அந்தச் சரக்கை ஏற்றுமதி செய்துகொள்ளலாம்.
எகிப்துக்கு இந்தியாவிலிருந்து 61,500 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட இருந்தது. இதில் பெரும் பகுதி கோதுமை கண்டெய்னர்களில் நிரப்பப்பட்டது. மத்திய அரசின் தடை உத்தரவால் மேற்கொண்டு நிரப்புவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள 17,160 டன் கோதுமையை நிரப்பி, அதை எகிப்துக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.