Published : 03 May 2016 09:25 AM
Last Updated : 03 May 2016 09:25 AM

ஹெச்டிஎப்சி லாபம் 31% உயர்வு

வீடு கட்ட கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள ஹெச்டிஎப்சி லிமிடெட் நிறு வனம் முடிவடைந்த மார்ச் நான்காம் காலாண்டில் ரூ.3,460 கோடியை லாபமாக ஈட்டியுள் ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத் தைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் நிறுவன லாபம் ரூ.2,646 கோடியாக இருந்தது.

கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 10,190 கோடியைத் தொட் டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் லாபம் ரூ.8,762 கோடியாக இருந்தது.

ஏற்கெனவே பங்குதாரர் களுக்கு இந்நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.3 இடைக்கால டிவி டெண்ட் வழங்கியது. தற்போது ரூ.14 இறுதி டிவிடெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x