உள்நாட்டில் விலையேற்றம்: உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா உடனடி தடை

உள்நாட்டில் விலையேற்றம்: உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா உடனடி தடை
Updated on
1 min read

உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்துள்ளது இந்திய அரசு. வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்துள்ளது இந்திய அரசு.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெள்ளிக்கிழமை மாலை இது தொடர்பாக ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. அதில், கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை அமலாகிறது. இருப்பினும், மே 13 ஆம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றின்படி மட்டும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாட்து அண்டை நாடுகள் ஏதேனும் கோதுமை கோரியிருந்தால், மத்திய அரசு அனுமதியுடன் எந்த நாடு கோரியுள்ளதோ அதற்கு அனுமதிக்கப்பட்ட அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிவிக்கையில் சர்வதேச அளவில் கோதுமை சந்தையில் திடீரே திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா மோதலால் ஆங்காக்கே போதிய அளவில் கோதுமை வழங்கலில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் கோதுமை சீராகக் கிடைக்காமல் சிக்கலில் உள்ளன. இந்நிலையில் உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, தேவையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமையின் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளையில் 2022-23 காலகட்டத்தில் கோதுமை ஏற்றுமதி தொடர்பாக மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 8 நாடுகளுடன் ஆலோசனை நடத்த பிரதிநிதிகளை அரசு அனுப்பிவைத்துள்ளது. 2022-23 ஆண்டில் 10 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் இந்தியா 7 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்தது அதில் 50% வங்கதேசத்துக்கு மட்டுமே ஏற்றுமதியானது.

இந்திய கோதுமைக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. அதனால், கோதுமை தரத்தை உறுதி செய்ய விவசாயிகள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் தரக் கட்டுப்பட்டில் கவனம் செலுத்துமாறு விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in