

சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஐந்து நிறுவனங்களின் சந்தை மதிப்பு 21,458 கோடி ரூபாய் சரிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் கடும் சரிவை சந்தித்தது.
ரிலையன்ஸ், இன்போசிஸ், சன் பார்மா, கோல் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய ஐந்து நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்தன. மாறாக டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ஹெச்டிஎப்சி மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய ஐந்து பங்குகளின் சந்தை மதிப்பு 20,100 கோடி ரூபாய் சரிந்தன.
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 14,229 கோடி ரூபாய் சரிந்து 3,02,768 கோடி ரூபாயாக இருந்தது. ஹெச்யூஎல் சந்தை மதிப்பு 3,992 கோடி ரூபாய் சரிந்து 1,75,852 கோடி ரூபாயாக இருந்தது. கோல் இந்தியாவின் சந்தை மதிப்பு 1,389 கோடி ரூபாய் சரிந்து 1,76,416 கோடி ரூபாயாக இருந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,136 சரிந்து 2,76,035 கோடி ரூபாயாக இருக்கிறது. சன் பார்மாவின் சந்தை மதிப்பு 709 கோடி ரூபாய் சரிந்தது.
மாறாக ஐடிசி சந்தை மதிப்பு 8,570 கோடி ரூபாய் உயர்ந்து 2,65,517 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஒஎன்ஜிசி சந்தை மதிப்பு 7,528 கோடி ரூபாய் உயர்ந்து 1,82,189 கோடி ரூபாயாக இருக்கிறது. ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு ரூ.2,258 கோடியும், டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.1,704 கோடியும், ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.37.93 கோடியும் உயர்ந்தன.
சந்தை மதிப்பு அடிப்படையில் டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது.