

பிட்காயின் நாணயத்தை கண்ட றிந்தவரின் பெயர் 7 ஆண்டு களுக்கு பிறகு வெளியாகியுள்ள நிலையில், சரியான நேரத்தில் பிட்காயின் நிறுவனர் கிரெய்க் ரைட் தன்னை அடையாள படுத்தி யுள்ளார் என்று எழுத்தாளர் டொமினிக் பிரிஸ்பி தெரிவித் துள்ளார். தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த போது இதனை தெரிவித்துள்ளார்.
2009 ஆண்டு சடோஷி நகமோ டோ என்ற புனை பெயரில் அடை யாளம் தெரியாத ஒருவரால் பிட் காயின் (டிஜிட்டல் கரன்சி) உருவாக்கப்பட்டது. 7 ஆண்டு களுக்குப் பிறகு பிட்காயின் கண்ட றிந்தவர் பெயர் வெளியாகி யுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரெய்க் ரைட் என்பவர் தான் பிட்காயினை கண்டுபிடித் துள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்தது.
`பிட்காயின்: எதிர்காலத்தின் பணம்?’ என்ற தலைப்பில் பிட்காயின் நாணயத்தை பற்றியும் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய மூன்றிலும் பிட்காயின் நாணயம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பற்றியும் டொமினிக் பிரிஸ்பி புத்தகம் வெளியிட்டவர்.
தற்போது பிட்காயினை கண்ட றிந்தவர் கிரெய்க் ரைட் என்று வெளிவந்துள்ளது குறித்து எழுத் தாளர் டொமினிக் பிரிஸ்பி தெரி வித்ததாவது: பிட்காயின் நாணயம் எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால் கிரெய்க் ரைட்டுக்கு குறிப்பிட்ட அளவு மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது பவுண்டு, டாலர், யூரோ என அனைத்து பணமும் 97 சதவீதம் டிஜிட்டல் கரன்சியாக மாறிவிட்டன. டிஜிட்டல் கரன்சி தான் எதிர்காலத்தில் சிறப்பாக இயங்குவதாக இருக்கும். இதே போல் பிட்காயின் நாணயமும் வளர்ச்சியடையும். பிட்காயின் நாணய பரிமாற்றத்தில் உள்ள குறைகளை களைய வேண்டிய தேவை இருக்கிறது. சடோஷி யின் ஆலோசனை இதில் தேவைப் படுகிறது.
அனைத்து வகையான பண மும் டிஜிட்டல் முறையில் மாறிவிட் டன. பிட்காயின் உரிமையாளர்கள் அதிகம் லாபியில் ஈடுபடுவது மட்டும் கவனிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.