Published : 23 May 2016 10:27 AM
Last Updated : 23 May 2016 10:27 AM

சீர்திருத்தங்களை வேகப்படுத்துவது அரசியல் ரீதியாக கடினமாக உள்ளது: ரகுராம் ராஜன் கருத்து

இந்தியாவில் சீர்த்திருத்தங்களை வேகப்படுத்துவது அரசியல்ரீதியாக கடினமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

புவனேசுவரத்தில் நடந்த சர்வதேச பொருளாதாரமும் இந்தியாவும் என்னும் தலைப்பில் உரை யாற்றிய ராஜன் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

வங்கிகளின் வாராக்கடனை குறைக்க வேண்டும், பணவீக் கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தி னால் மட்டுமே விரைவான வளர்ச் சியை நாம் உறுதிபடுத்த முடியும். தொழிலாளர் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சியை நாம் அதிகப் படுத்த முடியும், ஆனால் அது எதிர்க் கட்சிகளின் கையில் உள்ளது.

சர்வதேச சந்தை வீழ்ச்சி, 2 முறை வறட்சி ஏற்பட்டிருந்தாலும் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் நிலை யாக இருப்பதால்தான் இத்தனை தடைகளை தாண்டியும் வளர்ச்சி அடைய முடிந்தது.

பேரியல் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை தொடர்ந்து நாம் உறுதி செய்யவேண்டும். இதற்கு பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும், வங்கிகளை பல மாக்குவதும் அவசியம். இதன் மூலம் பேரியல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

இதனுடன் சீர்திருத்தங்கள் தொடரும்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு உயரும். இது பொரு ளாதாரத்தை மேலும் ஊக்கப் படுத்துவதாக இருக்கும்.

பொருளாதார பாதுகாப்பின் முதல் அடி சரியான கொள் கைகள்தான். நாடு குறுகிய காலத் துக்காக கடன் வாங்காமல் நீண்ட காலத்துக்கு கடன் வாங்குவது முக்கியம். நீண்ட காலத்துக்கு கடன் வாங்கும்போதுதான் பாது காப்பாக உணர முடியும்.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 36,000 கோடி டாலராக இருக்கிறது. இதுவும் ஒரு பாதுகாப்பு வளையம் தான். சர்வதேச சூழலுடன் ஒப் பிடும் போது நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். 2013-ம் ஆண்டு இருந்த சூழலில் நாம் இல்லை. அப்போது இருந்த ஏற்ற இறக்கம் இப்போது இல்லை.

அதே சமயத்தில் சில நிச்ச யமற்ற சூழல்களும் நிலவுகின்றன. சர்வதேச ஏற்ற இறக்க சந்தை மற்றும் மற்ற நாடுகள் எடுக்கும் கொள்கை முடிவுகள் நம்மை பாதிக்கலாம். இதிலிருந்து தற் காத்துகொள்ள வலுவான கொள் கைகளை நாம் உருவாக்க வேண் டும். வளர்ந்த நாடுகளில் தாராள கொள்கை மூலம் உருவாக்கும் பணப்புழக்கத்தால் பணவீக்கம் மட்டுமே அதிகரிக்கும் அதனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக் காது. சில நாடுகளில் வட்டி விகிதம் குறைக்கப்படும் போது முதலீடுகள் அதிகமாகாமல், சேமிப்பு விகிதம் உயர்ந்து வருகிறது என்றார்.

இந்தியாவில் இருந்து லைசென்ஸ் ராஜ் வெளியேறிவிட்டது. ஆனால் இன்ஸ்பெக்டர் ராஜ் இன்னும் தொடர்கிறது என்று ரகுராம் ராஜன் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது.

விதிமுறைகள் என்பது தொழில் துறையின் வளர்ச்சிக்காக இருக்கவேண்டும், மாறாக தொழில்முனைவோரின் தன்னம் பிக்கையை இழக்க செய்வதாக இருக்கக் கூடாது.

உதாரணத்துக்கு இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடு களை எடுத்துக்கொள்வோம். இங்கிலாந்தில் தொழில்முனைவு விதிமுறைகள் எளிதாக உள்ளன, இத்தாலியில் விதிமுறைகள் கடு மையாக உள்ளன. ஆனால் இத்தாலியை விட இங்கிலாந்தில் தொழில்முனைவோர்கள் அதிகம். சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் மீது நம் கவனத்தை செலுத்த வேண் டும்.

சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை முன்னுரிமை கடன் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததால் பொதுத்துறை நிறுவனங்கள் சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது அதிகரித்திருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான வசதியை, சூழலை உருவாக்கும் பட்சத்தில் அந்த நிறு வனங்கள் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு சிறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கொடுத்த கடன் 2 லட்சம் கோடி ரூபாய். ஆனால் ரிசர்வ் வங்கி முன்னுரிமை பிரிவில் கொண்டு வந்தவுடன் 2015-ம் ஆண்டு சிறு நிறுவனங்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x