

பொதுமக்கள் உள்நாட்டில் கணக் கில் வராத வருமானம் மற்றும் சொத் துக்களை தாமாக முன்வந்து தெரி விக்க வேண்டிய கால அவகாசம் ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்குகி றது. இந்த கால அவகாசம் செப்டம் பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
2016-17ம் ஆண்டுக்கான பட் ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்நாட்டில் கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத் துக்களை பற்றிய விவரங்களை தாமாக முன்வந்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கலாம். இதற்காக 4 மாத கால அவகாசம் வழங்கப்படும். ஜூன் 1-ம் தேதி முதல் இந்த தகவலை தெரிவிக்கலாம் என்று அறிவித்தார்.
2016 நிதி மசோதாவின் படி வருமான வரிச் சட்டம் 138 மற்றும் 119 ஆகிய பிரிவுகளில் சட்டத் திருத் தம் கொண்டுவரப்பட்டது. அதன் படி வருமான வரிச் சட்டம் 138 பிரிவு கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் வருமான வரிச் சட்டம் மற்றும் செல்வ வரி சட்டத்தின் படி கணக்கில் வராத வருமானத்தை தாக்கல் செய்தவர் கள் மீது எந்த விசாரணையும் செய்யப்படமாட்டாது.
நிதி மசோதாவில் மொத்தம் 55 சட்டத்திருத்தங்கள் முன்மொழியப் பட்டது. இதற்கான விவாதத்தில் கடந்த வியாழக்கிழமை நிதியமைச் சர் அருண் ஜேட்லி பதிலளித்தார்.
நிதி மசோதாவில் 9வது அத்தி யாயத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் திட்டம் 2016-ன் படி ஒரு நபர் முழு வரியை கடந்த காலத்தில் கட்டவில்லை என்றாலும் தற்போது தாமாக முன்வந்து கணக்கில் காட்டாத வருமானத்தை தாக்கல் செய்து அதற்கான வரி மற்றும் அபராதத்தை செலுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதற்கான சட்டத்திருத்த வரைவை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது.