

ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 5.67 சதவீதம் உயர்ந்து 2,495 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,361 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 2.57 சதவீதம் உயர்ந்து ரூ.9,911 கோடியாக இருக்கிறது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் லாபம் ரூ.9,663 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் நிகர விற்பனை 9.51 சதவீதம் உயர்ந்து 10,062 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 9,188 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 1.6 சதவீதம் நிகர விற்பனை உயர்ந்தது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.38,433 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.39,066 கோடியாக இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு 8.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.