

சென்னையை அடுத்த பூந்தமல்லி யில் உலகத் தரம் வாய்ந்த குடியிருப்புகளை டெவலப்பர் குழுமம் உருவாக்கத் திட்டமிட் டுள்ளது. ரூ. 400 கோடி மதிப்பி லான `வெஸ்ட்வின்ட்’ என்ற பெயரி லான இக்குடியிருப்புத் திட்டத் தில் ஜப்பானைச் சேர்ந்த டாமா ஹோம் மற்றும் நொகாரா ஆகிய நிறுவனங்கள் ரூ.60 கோடி வரை முதலீடு செய்கின்றன.
ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடுகள் 100 சதவீத அளவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானிய நிறுவ னங்கள் நேரடியாக முதலீடு செய்யும் முதலாவது குடியிருப்புத் திட்டம் இதுவாகும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6.84 ஏக்கர் பரப்பளவில் அமைய வுள்ள இந்த குடியிருப்புகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் கட்டப்படுகின்றன. 630 முதல் 1,100 சதுர அடி பரப்பில் 580 வீடுகள் முதல் கட்டமாகக் கட்டப்பட உள்ளன.
நீச்சல் குளம், பேட்மிட்டன் உள் விளையாட்டு அரங்கம், நூலகம், பல நோக்கு அறை உள்ளிட்ட வசதி களைக் கொண்டதாக இந்த அடுக் குமாடிக் குடியிருப்பு கட்டப் படுகிறது.
இத்திட்டப் பணிகள் தொடங் கிய நாளிலிருந்து மூன்றாண்டு களில் வாடிக்கையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும்.ரூ.35 லட்சம் முதல் ரூ.42 லட்சம் வரை யில் வீடுகளுக்கான விலைகள் அவற்றின் பரப்பளவுக்கேற்ப அமையும் என்று டெவலப்பர் குழும இயக்குநர் அனந்த நாராய ணன் கூறினார்.
விசாகப்பட்டினத்தைத் தொடர்ந்து சென்னையில் இக்குடி யிருப்புத் திட்டத்தை மேற்கொண் டுள்ளதாக நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி ஆல்பின் டேவிட் ரெபலோ குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து பெங்களூர், புணே மற்றும் லுதியானாவில் குடியிருப்புத் திட்டங்களை மேற் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகக் கூறினார்.