

உலக அளவில் உணவு சார்ந்த தொழில் துறையில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது 'தாவர இறைச்சி'. இவை இறைச்சிகளுக்கு மாற்று எனச் சொல்லப்படுகிறது. இதனை சைவ இறைச்சி என்றும் சொல்கிறார்கள்.
தாவர இறைச்சி: பூமிப் பந்தில் மாற்றுமுறை இறைச்சியை உருவாக்கும் முயற்சி, சீன தேசத்தில் ஆன் அரசாட்சி காலத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது. இறைச்சிக்கு நிகரான சுவையை கொடுக்கும் மாற்றுமுறை இறைச்சியை உருவாக்க கோதுமை, அரிசி, காளான், பருப்பு வகைகள், காய்கறிகளில் இருக்கும் புரதம், சோயா மில்க் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராவதாக தெரிகிறது.
கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு இப்போது தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட இறைச்சி உருவாக்கப்பட்டு வருகிறது. தாவரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட புரதங்கள் மூலம் தாவர இறைச்சி தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. சரி, இந்தியாவில் தாவர இறைச்சியை தயாரித்து வரும் டாப் 5 பிராண்டுகளைப் பார்ப்போம்…
> அர்பன் பிளேட்டர்: கடந்த 2015-இல் மும்பை நகரில் நிறுவப்பட்ட நிறுவனம் இது. தவால் மற்றும் சிராக் என இருவர் இதனை நிறுவியுள்ளனர். ரெடி-டூ-ஈட் சைவ இறைச்சிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. பலாப்பழம், சோயா பீன் போன்றவற்றை இந்நிறுவனம் பிரதானமாக பயன்படுத்தி மாற்று முறை இறைச்சிகளை தயாரிக்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் அர்பன் பிளேட்டர் இயங்கி வருகிறது.
> Veggie Champ: இந்தியாவின் முன்னணி சைவ பிராண்டுகளில் ஒன்று என சொல்லப்படும் அகிம்சா ஃபுட், Veggie Champ மூலம் மாற்று முறை இறைச்சிகளை தயாரித்து வருகிறது.
> Wakao ஃபுட்ஸ்: சைவ உணவுகளை முன்னிலை படுத்தும் நோக்கில் கோவாவில் ஸ்டார்ட்-அப் முயற்சியாக தொடங்கப்பட்டதுதான் Wakao ஃபுட்ஸ். பிரியாணி முதல் டிக்கா வரை Wakao ஃபுட்ஸ் தாவர இறைச்சியை கொண்டு சமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> வெஜிட்டா கோல்ட்: சென்னையில் கடந்த 2015-இல் நிறுவப்பட்டது தான் வெஜிட்டா கோல்ட். காளான், சோயா மற்றும் காய்கறி புரதங்களை கொண்டு சைவ இறைச்சியை தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.
> வெஸ்லே ஃபுட்ஸ்: டெல்லியில் கடந்த 2011-இல் நிறுவப்பட்ட நிறுவனம் வெஸ்லே ஃபுட்ஸ். சோயா பீனிலிருந்து மாற்று முறை இறைச்சிகளை தயாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா தம்பதியினர் தாவர இறைச்சியை தயாரிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.