

இன்றைய அட்சய திருதியை தினத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு தேவை அதிக ரிக்கும் என்று புளூ ஸ்டோன் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவ னங்கள் நம்பிக்கை தெரிவித்திருக் கின்றன.
“கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 6 மடங்கு விற்பனை உயரும். குறிப்பாக 22 கேரட் நகை பிரிவில் செயின் மற்றும் கழுத்து சங்கிலிகளுக்கு தேவை அதிகரிக்கும். இணைய தளத்தை பார்வையிடும் வாடிக் கையாளர் எண்ணிக்கை 100 சத வீதம் உயரும்” என்று அமேசான் நிறுவனத்தின் பேஷன் பிரிவு தலைவர் மயங்க் சிவம் தெரி வித்தார்.
புளூஸ்டோன் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதி காரி அர்விந்த் சிங்காலும் இதே கருத்தை தெரிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களாக அட்சய திருதியை தினத்தில் நகை வியா பாரம் உயர்ந்து வருகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஆறு மடங்கு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வருடம் தங்க நாணயங்கள், வைரத்தோடு மற்றும் வைர பதக்கங்களுக்கு அதிக தேவை இருக்கும். அட்சய திருதியை முக்கியமான நாள் என்பதால், தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களால் தேவை குறையாது” என்றார் அவர்.
காரட்லேன் டாட் காம் நிறு வனத்தின் துணைத்தலைவர் விபின் நாயர் கூறும்போது “இந்த வருட அட்சய திருதியை தினத்தில் நல்ல விற்பனையை எதிர்பார்க்கி றோம். தங்கத்தை தவிர வைர விற் பனையில் அதிக ஏற்றம் இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.