

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டன. இந்த ஒப்பந்த காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு இரு நிறுவனங்கள் நீட்டித்தன.
இந்த இரு நிறுவனங்களும் கடந்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி இணைவதற்கான 90 நாட்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் இந்த மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இந்த ஒப்பந்த தேதி முடிவுறுவதை அடுத்து மேலும் 30 நாட்களுக்கு அதாவது ஜூன் 22-வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் 19.3 சதவீத ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வைத்திருக்கும். அதேபோல ரிலை யன்ஸ் நிறுவனம் சிஸ்டமா நிறு வனத்தை கையகப்படுத்தும் நட வடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.