

மும்பை: 2020-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம், ஃப்யூச்சர் குழுமத்தின் 19 நிறுவனங்களை ரூ.24,713 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஃப்யூச்சர் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கைவிட்டுள்ளது.
ஃப்யூச்சர் குழும நிறுவனங்கள் சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகின்றன. இக்குழுமத்தின்19 நிறுவனங்களை வாங்க ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்திற்க்கு ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற பாதுகாப்பான கடன்தாரர்கள் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக ரூ.24,731 மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.45 சதவீதம் சரிந்தது.