

இந்திய இ-காமர்ஸ் துறையில் வரும் 2020-ம் ஆண்டு 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமா னம் வரும் என்று கணிக்கப்பட் டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இறுதியில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் இருந்தது.
வளர்ந்து வரும் இளைஞர்கள், இணைய பயன்பாடு உயர்ந்து வருவது, பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால் 8 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட் டும் என்று அசோசேம்- பாரஸ்டர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்திய இ-காமர்ஸ் சந்தையின் அடிப்படை அளவு குறைவாக இருப்பதால் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்திய இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 51 சதவீதமாக இருக்கிறது. மாறாக சீனா இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 18 சதவீதமாகவும், ஜப்பானின் இ-காமர்ஸ் வளர்ச்சி 11 சதவீதமாகவும், தென் கொரியாவின் ஆண்டு வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருக்கிறது.
தற்போது இந்தியாவில் இணையம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை பிரேசிலில் 21 கோடியாகவும், ரஷ்யாவில் 13 கோடியாகவும் இருக்கிறது.
இந்தியாவில் இணையம் பயன் படுத்துபவர்களில் 75 சதவீதத் தினர் 15 முதல் 34 வயதுடை யவர்களாக இருக்கிறார்கள். மொத்த இ-காமர்ஸ் வணிகத்தில் 60 முதல் 65 சதவீதம் வரை ஸ்மார் ட்போன்கள் மூலமாக நடக்கிறது. பிராண்டட் துணி வகைகள், நகை, காலணி, பரிசுப்பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை இ-காமர்ஸில் அதிகம் வர்த்தகமாகின்றன.