

புது டெல்லி: இந்தியாவில் 2022 மாருதி சுசுகி XL6 வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் புதிய அப்டேட்களுடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது மாடல் கார்களை மாருதி அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அப்டேட் செய்யப்பட்ட XL6 வாகனம் அறிமுகமாகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் நெக்ஸா விற்பனை மையம் மூலமாக இந்த கார்களை விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.
அப்டேட் செய்யப்பட்ட கிரில், சாம்பல் நிற எஃபெக்டிலான டெயில் லாம்ப், 16 இன்ச் டூ டோன் அலாய் வீல்ஸ் போன்றவை முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது மாற்றம் கண்டுள்ளது. ஆறு மோனோ டோன் மற்றும் மூன்று டியூயல் டோன் எக்ஸ்டீரியர் வண்ணங்களில் கிடைக்கும் என தகவல். நான்கு ஏர்பேக்ஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மாதிரியானவை இதில் உள்ளது.
1.5 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின், மேனுவல் மற்றும் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் அம்சங்களும் இதில் உள்ளன. இந்த காரின் ஆரம்ப விலை 11.29 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த வாகனம் எர்டிகா, கியா Carens, மஹிந்திரா Marazzo மாதிரியான கார்களுக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.