Published : 19 May 2016 08:30 AM
Last Updated : 19 May 2016 08:30 AM

ஆசிய வளர்ச்சி வங்கி உயர் பதவிக்கு ஸ்வாதி தண்டேகர் பரிந்துரை

இந்திய-அமெரிக்க அரசியல் வாதியான ஸ்வாதி தண்டேகரை ஆசிய வளர்ச்சி வங்கி நிர்வாக இயக்குநர் பொறுப்பிற்கு அமெரிக்க செனட் பரிந்துரை செய்துள்ளது.

65 வயதுடைய ஸ்வாதி தண் டேகர் இந்தியாவில் பிறந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர் மாகாண தேர்தலில் வெற்றி பெற்றவர். 2003-ம் ஆண்டு ஐயோவா மாகாண பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்க அரசியல்வாதி ஆவார்.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியில் அமெ ரிக்காவின் மிக உயர்ந்த பொறுப் பிற்கு தண்டேகரை அமெரிக்க அதி பர் ஒபாமா பரிந்துரை செய்தார்.

2003ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை ஸ்வாதி தண்டேகர் ஐயோவா சபை பிரதிநிதி பொறுப்பில் இருந்தவர். அதுமட்டுமல்லாமல் ஐயோவா மாகாண செனட் உறுப்பினராக 2009-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இருந்தவர்.

நாகபுரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டமும், பம்பாய் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். இவரது கணவர் அர்விந்த் தண்டேகர் பாஸ்டெக் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x