

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வால் கடந்த ஏப்ரலில் மறைமுக வரி வருமானம் 42 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் 45,117 கோடி ரூபாயாக இருந்த மறைமுக வரி, இந்த ஏப்ரலில் 64,394 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகியவை சேர்ந்ததுதான் மறைமுக வரி. இதில் உற்பத்தி வரியின் பங்கு கடந்த ஆண்டு ஏப்ரலை விட 70.7 சதவீதம் உயர்ந்து தற்போது 28,252 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி 5 முறை உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் கூடுதலாக 17,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. சேவை வரி 28 சதவீதம் உயர்ந்து ரூ.18,647 கோடியும், சுங்க வரி 22 சதவீதம் உயர்ந்து 17,495 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.